Deprecated: Creation of dynamic property biz::$db_conn is deprecated in G:\PleskVhosts\madurai-biz.com\maduraibiz\classes\db.php on line 16
Unave marunthu,கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்,Madurai Local Directory

Unave marunthu

கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள், Unave marunthu,Madurai Local Directory

கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்

கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்

கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும்.
கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து "தசமூலம்" என்பதாகும். இது 10 மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, சளி ஆகிய நோய்கள் குணமாகும்.
வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.
கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
கண்டங்கத்திரி இலையை எடுத்து நன்றாக இடித்து சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சம அலவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் பூசிவர நாற்றம் முற்றிலும் நீங்கும்.
கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.

Hits: 733, Rating : ( 5 ) by 1 User(s).